Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சுப்பர் லீக் 2022 கால்பந்தாட்ட போட்டி ரண்டிப் அணி அபார வெற்றி...!



இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் சுப்பர் லீக் 2022 கால்பந்தாட்ட போட்டியின் நான்காம் வாரத்திற்கான போட்டிகள் சனிக்கிழமை (02) இடம்பெற்றன. இச்சுற்றின் செரண்டிப் அணி நிகம்பு யூத் அணி மத்தியிலான போட்டி குருணாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் இடம்பெற்றது. 

போட்டியின் நான்காம் நிமிடத்தில் செரண்டிப் அணி வீரர் மொகமட் பயாஸ் லாவகமாக ஒரு கோலை பெற்றார். இவரைத் தொடர்ந்து இவ் அணியின் வீரர் ஒபேரி ஜோர்ஜ் 38 ஆவது நிமிடத்தில் தன் அணிக்கான ஒரு கோலை சுவீகரித்தார்.

இதனைத் தொடர்ந்து நிகம்பு யூத் அணி வீரர் அந்தோனி இக்குவேபோ 50 ஆம் நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார்.மீளவும் செரண்டிப் வீரர் அசந்த ஈவன்ஸ் 66, 80 ஆவது நிமிடங்களில் இரு கோல்களை பெற அவ் அணித் தலைவர் றியாஸ் மொகமட் 78 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை சுவீகரித்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில் போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் நிகம்பு யூத் அணி வீரர் சிட்ஸ்டீன் பெர்னாண்டோ ஒரு கோலை சுவீகாரம் செய்ய இப் போட்டியானது 05-02 என்ற கோல் வித்தியாசத்தில் செரண்டிப் அணி அபார வெற்றிபெற்று இச் சுப்பர் லீக் 2022 போட்டி சுற்றுகளில் தன் அணிக்கான நான்காவது வெற்றியை கைப்பற்றியது.

இச்சுற்றின் மற்றுமொரு போட்டியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நியூ ஸ்டார் - மொரகஸ் முல்ல அணிகள் மோதின.இப் போட்டியின் நான்காம் நிமிடத்தில் மொரகஸ் முல்ல வீரர் புபுது சல்காது ஒரு கோலை கைப்பற்ற பதிலுக்கு 07 ஆவது நிமிடத்தில் மொகமட் சாஜிர் நியூ ஸ்டார் அணிக்கான ஒரு கோலை சுவீகாரம் செய்தார்.

இப் போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் மொகமட் அனஸ்,78 ஆம் நிமிடத்தில் மொகமட் அஸ்மின் 81 ஆவது நிமிடத்தில் மொகமட் சாஹிர் ஆகிய வீரர்கள் தலா ஒவ்வொரு கோலை பெற்று 04-01 என்ற வித்தியாசத்தில் நியூ ஸ்டார் அணியை வெற்றி பெற வைத்தனர்.இவ் வெற்றியானது இச் சுப்பர் லீக் சுற்றில் நியூ ஸ்டார் பெற்ற 02 ஆம் வெற்றியாகும்.

இதே தினம் காலி விளையாட்டரங்கில் சோண்டர்ஸ் அணி இலங்கை போக்குவரத்து சபை அணியினர் மோதினர்.இப் போட்டியின் இறுதிவரை கோல்கள் பெறமுடியாது இரு அணிகளும் மோதிய நிலையில் போட்டி வெற்றி தோல்வி இல்லாது முடிவுற்றது.

Post a Comment

0 Comments