Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான திகதிகள் அறிவிப்பு...!


2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை அடுத்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2028ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜூலை 14ஆம் திகதி முதல் ஜூலை 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இது 3ஆவது முறையாகும். ஏற்கனவே 1932, 1984ஆம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments