நாளை(22) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நடைமுறையிலுள்ள பஸ் கட்டணத்தில் 50 வீதமாக நிர்ணயித்து ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் குறைந்தபட்ச ரயில் கட்டணம் 10 ரூபாவிலிருந்து 20 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இன்று(21) முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கான நேர அட்டவணையின் படி, ரயில் பயணங்களுக்கு ஆசனங்களை பதிவுசெய்துகொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Colombo (News 1st)


0 Comments