தினேஷ் சந்திமாலின் அபார சதத்துடன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணியை விட 67 ஒட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் நிதானமான ஆடுவார் என்ற நிலையில் மெண்டிஸ் 85 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு மெத்திவ்ஸுடன் இணைந்தால் சந்திமால் இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டம் வழங்கிய நிலையில் மெத்திவ்ஸ் 52 ஓட்டங்கள் பெற்று அரைச்சதம் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் சந்திமாலுடன் இணைந்தார் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் இருவரும் நன்றாகவும் நிதானமாகவும் ஆடிய வேளை கமிந்து 61 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சுவப்சன் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் விக்கெட் காப்பாளர் திக்வெல்ல 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில் பின்வரிசையில் வந்த ரமேஷ் மெண்டிஸ் சந்திமாலுடன் இணைந்து இலங்கை அணிக்கு ஓரளவு நம்பிக்கை வழங்கினர்.சந்திமால் தனது 13 அவது டெஸ்ட் சதத்தை நேற்று பூர்த்தி செய்தமை விசேட அம்சமாகும்.
சந்திமால் 118 ஓட்டங்களுடனும் மெண்டிஸ் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
பந்து வீச்சை பெறுத்தவரை ஆஸி அணி சார்பாக மிச்சல் ஸ்டார்க்,நதன் லயன் மற்றும் மிச்சல் சுவப்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை பதம் பார்த்தனர்.
நேற்று முன்தினம் முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணியானது மதியபோசன இடைவேளையின் போது விக்கெட்டிழப்பின்றி 8 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மதியபோசன இடைவேளையின் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு பட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் அழுத்தங்களை கொடுக்க, பெதும் நிஸ்ஸங்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்னவுடன் இணைந்து இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்ப தொடங்கினார். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அழுத்தங்களுக்கு மத்தியில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 35 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 23 ஓட்டங்களையும் பெற தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தேநீர் இடைவேளையின் பின்னர் குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.
மெண்டிஸ் மற்றும் கருணாரத்ன ஆகியோர் தங்களுடைய அரைச்சதங்களை பதிவுசெய்தது ஓட்டங்களை குவித்த நிலையில், திமுத் கருணாரத்ன 2ம் நாள் ஆட்டநேர நிறைவுக்கு 30 நிமிடங்கள் இருக்கும்போது மிச்சல் ஸ்வெப்சனின் பந்துவீச்சில் 86 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இதில் மெண்டிஸ் மற்றும் கருணாரத்ன ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 152 ஓட்டங்களை பகிர்ந்து, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கான இலங்கை அணியின் அதிகூடிய இணைப்பாட்டத்தையும் பகிர்ந்தனர். இதற்கு முன்னர் கடந்த 2007ம் ஆண்டு குமார் சங்கக்கார மற்றும் மார்வன் அத்தப்பத்து ஆகியோர் 148 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர்.
திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழப்பின் பின்னர் குசல் மெண்டிஸ் தொடர்ந்தும் சிறப்பாக துடுப்படுத்தாட, அஞ்சலோ மெதிவ்ஸ் தன்னுடைய பங்களிப்பை வழங்கினார். இதன்மூலம் இலங்கை அணி 2ம் நாள் ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அஞ்சலோ மெதிவ்ஸ் 6 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் மிச்சல் ஸ்வெப்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இன்று போட்டியின் 4 ஆவது நாளாகும்.

0 Comments