Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தவறுதலாக 300 மடங்கு சம்பளம் பெற்றவர் மாயம்...!



இறைச்சி தொழிற்சாலையின் தொழிலாளர் ஒருவருக்கு தவறுதலாக 300 மடங்கு சம்பளம் போடப்பட்டதை தொடர்ந்து அவர் அந்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல்போயுள்ளார்.

தென் அமெரிக்க நாடான சிலியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அந்தத் தொழிலாளிக்கு 500,000 சிலி பெசோஸ் மாதச் சம்பளத்திற்கு பதில் 165,398,851 பெசோஸ் பணம் வங்கியில் போடப்பட்டிருந்தது.

சியால் என்ற அந்த தொழிற்சாலை தனது காணாமல்போன ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

தவறுதலாக வழங்கப்பட்ட பணத்தை திருப்பித் தருவதாக தொழில்சாலை நிர்வாகத்திற்கு அந்த ஊழியர் வாக்குறுதி அளித்த நிலையில் பதவியை இராஜினாமா செய்துவிட்டு காணாமல்போயுள்ளார்.

Post a Comment

0 Comments