Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நாணயத்தில் 3 பூஜ்யத்தை அகற்றியது சியராலியோன்...!



பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சியராலியோன் தனது நாணயத்தாளில் மூன்று பூஜ்யங்களை அகற்றி புதிய நாணயத்தாளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய நாணயத்தாலின்படி பழைய 10,000 லியோன் நாணயம் 10 லியோன் நாணயமாக மாற்றப்பட்டுள்ளது. இது 1 அமெரிக்க டொலருக்கு குறைவான பெறுமதியாகும். எனினும் இந்த மாற்றம் பொதுமக்களின் வாங்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சியராலியோன் மத்திய வங்கி அறிவித்துள்ளாது. எனினும் இது பொருளாதார சூழலை மேலும் மோசமடையச் செய்யும் என்று சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த மேற்கு ஆபிரிக்க நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அந்நியச் செலாவணியின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதிகம் இறக்குமதியில் தங்கியிருப்பதன் காரணமாக பொருளாதார ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது.

இங்கு கடந்த ஆறு மாதங்களில் உணவு விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments