Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இராஜினாமா; சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பு...!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 14 ஆம் திகதி அமுலுக்குவரும் வகையில் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) உறுதிப்படுத்தினார்.

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதென சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி ஜனாதிபதி தனது பதவியை சட்டரீதியாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதனால் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் எனவும் சபாநாயகர் கூறினார்.

புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வரை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை பிரதமர் நிறைவேற்றுவார் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை(16) சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதெனவும் அதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.a

Post a Comment

0 Comments