
சீன மற்றும் பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடர்பான வேலைத்திட்டங்களில் பாகிஸ்தானில் பணியாற்றும் சீனப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
தமது பிரஜைகளதும் சொத்துகளதும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவென தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றை பாகிஸ்தானில் இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு சீனாவின் அரசாங்க பாதுகாப்பு அமைச்சு கேட்டுள்ளது. இக்கோரிக்கையை பாகிஸ்தான் அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சீனா முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் பணியாற்றும் சீனப் பிரஜைகள் மீது பலுசிஸ்தான், கராச்சி போன்ற இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களின் அடிப்படையிலேயே இக்கோரிக்கையை சீனா விடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த இரண்டொரு வருடங்களாக சீனப் பிரஜைகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் ஹொங்கொங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

0 Comments