Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே' : இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர்...!




அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே; எடப்பாடி பழனிசாமி கிடையாது ன நெல்லை அதிமுக பெண் நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.



இதனால் யார் பொதுச் செயலாளர் என்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் சுவரொட்டிகள் மூலம் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், நெல்லை மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தமிழரசி மாநகர் முழுவதும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே; எடப்பாடி பழனிசாமி கிடையாது என சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments