- பதில் ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி
இன்று (18) முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 40(1) (இ) பிரிவு மற்றும் ஏனைய இது தொடர்பான சட்டங்களின் அடிப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments