Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரயில் சேவைகள் குறித்த தகவல்களை கேட்டறிவதற்கான புதிய தொலைபேசி எண்....



இலங்கை ரயில்வே திணைக்களத்துடன் பயணிகள் இலகுவாக தொடர்பு கொள்வதற்காக அவசர தொலை பேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில் சேவைகள், ரயில் அட்டவணைகள் அல்லது பிற தொடர்புடைய தகவல்கள் பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு திணைக்களத்தை தொடர்பு கொள்ள விரும்பும் பயணிகள் எந்த நேரத்திலும் 1971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.

ரயில் சேவை இயக்க அட்டவணைகள், இருக்கை முன்பதிவுகள், ரயில் கட்டணம், ரயில்வே பாதுகாப்பு சேவைகளை தொடர்பு கொள்ளுதல் மற்றும் புகையிரத கடவைகள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற தகவல்களை மக்கள் பெறலாம்.

புதிய 24 மணித்தியாளங்களும் செயல்படும் 1971 என்ற அவசர தொலை பேசி இலக்கம் நாளை (14) காலை 7.00 மணிக்குப் பிறகு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments