Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கிண்ணியா தள வைத்துசாலையில் ஒரு வருட காலமாக சத்திர சிகிச்சை வைத்தியர் இன்றி நோயாளிகள் அவதி...!




கிண்ணியா தள வைத்தியசாலை ஒரு வருட காலமாக சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் இல்லாமல் இயங்கிக் கொண்டு கொண்டு வருகின்றது. இதன் காரணமாக நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம். நசூர்தின் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர், நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்த வைத்தியசாலை தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் பௌதீக மற்றும் ஆளணி ரீதியான பற்றாக்குறைவுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் கடந்த 2021 07. 21 இல் வைத்தியசாலையில் இருந்து எவ்வித பதில் நியமனமும் இன்றி, அவரது உயர் கல்விக்காக விடுவிப்புச் செய்யப்பட்டார் .

அன்றிலிருந்து இன்று வரை சுமார் ஒரு வருட காலமாக சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. இது மிகப் பெரிய கவலையளிக்கும் செயலாகும். சத்திர சிகிச்சை வைத்திர் ஒருவரை நியமித்து தருகிறோம் என உரிய அதிகாரிகள் பலமுறை வாக்குறுதி அளித்தும் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டே வந்துள்ளது.


சத்திர சிகிச்சைக்காக 15கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மூதூர் வைத்தியசாலைக்கும் 20கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருகோணமலை ஆதாரவைத்திசாலைகளுக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவழித்து செல்ல வேண்டிய ஒரு அவல நிலைக்கு கிண்ணியா மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தற்போது எமது நாடும் நாட்டு மக்களும் முகம் கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடி, தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு எரிபொருள் தட்டுப்பாடு இவைகளுக்கு மத்தியில் கிண்ணியாவில் இருந்து திருகோணாமலை மூதூர் வைத்தியசாலைகளுக்கும் சத்திர சிகிச்சைக்காக சென்று வருவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி உள்ளது.நோயாளிகள் உரிய நேரத்துக்கு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைக்கு முகம் கொடுப்பதோடு மேலும் அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலையும் காணப்படுகிறது.

இனிமேலும் கால இழுத்தடிப்புகளை செய்யாமல் மக்களின் நலனுக்காக உடனடியாக ஒரு சத்திர சிகிச்சை வைத்தியரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Post a Comment

0 Comments