Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்திய அணிக்கு தொடர் வெற்றி...!



இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 2–1 என வென்றது.

மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 259 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அணித்தலைவர் ஜோஸ் பட்லர் 60 ஓட்டங்களை பெற்றார். ஹார்திக் பாண்டே 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பதிலெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு மத்திய வரிசையில் ரிஷாப் பான்ட் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை விளாச அந்த அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

பந்துவீச்சில் சோபித்த பாண்டே 55 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments