- பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்
- WhatsApp இலக்கம்: 0718594950
ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு மற்றும் அவரது உத்தியோகபூர்வ வாகன சேதப்படுத்தப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்புமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து, இடம்பெற்ற அமைதியின்மையின்போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் சொந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதோடு, அவரது உத்தியோகபூர்வ வாகனம் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் கையடக்கத்தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் சாதனங்கள் மூலம் வீடியோ பதிவுகள் அல்லது புகைப்படங்கள் எடுத்திருந்தால், அது தொடர்பான காட்சிகளை பின்வரும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு, பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 Comments