Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தொடர்ச்சியாக தினமும் எரிபொருள் வழங்கினால் பஸ் கட்டண நிவாரணம்...!



- தற்போதைய விநியோகம் 1,500 - 2,000 பஸ்களுக்கே போதுமானது -

தினமும் எரிபொருள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுமானால், குறைக்கப்பட்ட எரிபொருள் விலையின் அடிப்படையிலான சலுகையை மக்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடியதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.


இ.போ.ச. பஸ் டிப்போவின் ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், விநியோகம் போதுமானதாக இல்லை என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இ.போ.ச. ஊடாக வழங்கப்படும் எரிபொருள் மூலம் 1,500 தொடக்கம் 2,000 வரையான பஸ்களை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியுமெனவும் தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான மாற்று வேலைத்திட்டம் ஒன்றை அவசரமாக தயாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (17) இரவு 10.00 மணி முதல் நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளின் விலைகள் ரூ. 10 - 20 இனால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments