
அக்கரைப்பற்று "தே வேக்கர்ஸ் யூனியன்" ஏற்பாட்டில் அதன் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான எம்.ஏ.ஜெயினுடீன் அவர்களின் தலைமையில் தற்கால சூழ்நிலையில் பொதுமக்கள் துவிச்சக்கர வண்டி பாவனையை பயன்படுத்துவதற்காக அதனை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வான "துவிச்சக்கரவண்டி சவாரி"
சனிக்கிழமை (25) காலை, அக்கரைப்பற்று நீர் பூங்கா வளாகத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த சவாரி அக்கரைப்பற்று பிரதான வீதியூடாக சென்று பிஸ்கால் சந்தியில் இருந்து திரும்பி தேசிய பாடாசாலை வீதி ஊடாக புதுப்பள்ளி சந்தியை அடைந்து மீண்டும் பிரதான வீதியை அடைந்து மணிக்கூட்டுக் கோபுரத்தினால் திரும்பி மீண்டும் பிரதான வீதியூடாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையை அடைந்து அங்கிருந்து நீர் பூங்காவை வந்தடைந்து அங்கு அனைவருக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த துவிச்சக்கர சவாரியில் வைத்தியர்கள், அரச உயரதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள், பொது மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments