Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நீண்ட சட்ட ரீதியான போராட்டத்திற்கு தயாராகி வரும் ட்விட்டர் - மஸ்க்...!



ட்விட்டரை வாங்கும் உடன்பாட்டில் பல மீறல்களை செய்ததாக குற்றம்சாட்டி அதனை 44 பில்லியன் டொலருக்கு வாங்கும் திட்டத்தை கைவிடப்போவதாக உலகின் பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தனது ஸ்பாம் மற்றும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை பற்றி போதுமான தகவலைத் தருவதற்கு தவறியதன் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக மஸ்க் தெரிவித்துள்ளார். 

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ‘ட்விட்டரின் நிர்வாக சபை மஸ்குடன் ஒப்புக்கொண்ட விலை மற்றும் விதிமுறைகளின் பரிவர்த்தனையை நிறைவு செய்ய உறுதிபூண்டுள்ளது’ என்று ட்விட்டர் தலைவர் பிரெட் டைலர், ட்விட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே நீண்ட சட்டப் போராட்டம் ஒன்று வெடிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அசல் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒரு பில்லியன் டொலர் முறிவுக் கட்டணமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்க்கின் அதிரடி முடிவு பலருக்கு ஆச்சரியம் அளித்தது. ‘உலகம் இதுவரை காணாத வேடிக்கையான வர்த்தக ஒப்பந்தக் கதை இது’ என்று ஆய்வாளர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments