Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

லிபிய வீதிகளில் மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்...!


 

லிபியாவில் உணவு விலை அதிகரிப்பு, நீண்ட நேர மின் வெட்டு மற்றும் அரசியல் இழுபறிக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை இரவு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

முகத்தை மூடிய இளைஞர்கள் மத்திய திரிபோலி மற்றும் அதன் மேற்கு புறநகர் பகுதிகளுக்கு இடையிலான பிரதான கரையோர நெடுஞ்சாலை உட்பட வீதிகளை முடக்கி, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெனி வலித் மற்றும் துறைமுக நகரான மிஸ்ராட்டாவிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றது சமூக ஊடக வீடியோக்கள் காட்டுகின்றன.

நாட்டின் இரு போட்டி அரசுைகளின் பாராளுமன்றங்களையும் கலைத்து புதிய தேர்தல்களை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடாக இருந்தபோதும் லிபியாவில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை மின் வெட்டு நீடிப்பது மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments