Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தனது முதல் படத்திலே அடுத்த ரஜினி என பேசப்பட்ட நடிகர் ! அஜித்தும் இல்லை, விஜய்யும் இல்லை, யார் தெரியுமா?


அடுத்த ரஜினி

தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகளவில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இவரை போல எந்த ஒரு நடிகரையும் தமிழ் சினிமா பார்த்ததில்லை.

அப்படியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு அடுத்தபடியாக இப்போது விஜய்யா? அஜித்தா? என எப்போது ஒரு வாக்குவாதம் கோலிவுட் வட்டாரத்தில் இருக்கும்.

ஆனால் இப்போதும் ரஜினி தமிழ் சினிமா No.1 நடிகராக தான் திகழ்ந்து வருகிறார். ஆனால் ஒரு நடிகர் தனது முதல் திரைப்படத்திலே அடுத்த ரஜினி என பேசப்பட்டுள்ளார் என்பது பேருக்கு தெரியும்.



நடிகர் பார்த்திபன்

ஆம், அது நடிகர் பார்த்திபன் தான் தனது புதியபாதை திரைப்படத்தின் முலம் அறிமுகமான பார்த்திபன் அவரின் முதல் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படம் வெளியான பின்பு நடிகர் பார்த்திபனை அடுத்த ரஜினிகாந்த் என சொல்லும் அளவுக்கு பேசப்பட்டாராம்.

இதனை பார்த்திபன் தனது புதிய திரைப்படமான இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments