Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உக்ரைன் மீதான ரஷ்ய போர்: உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்...!



உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் சந்தித்துப் பேச தயாராகி வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உலகம் போராடிவரும் நிலையில் ரஷ்யாவின் ஊடுருவல் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதாக யெல்லன் கூறினார்.

உக்ரைனியப் போரால் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதகமான விளைவுகள் நேர்வதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போரால் உலகளாவிய வகையில் ஏற்படும் பொருளாதார சீரழிவுக்கும் மனிதாபிமான விளைவுகளுக்கும் சர்வதேச சமூகம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினைப் பொறுப்பாக்க வேண்டுமென அமெரிக்க நிதியமைச்சர் வலியுறுத்தினார்.

Post a Comment

0 Comments