Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உக்ரைனிய ஜனாதிபதியால் முக்கிய அதிகாரிகள் நீக்கம்...!



உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி நாட்டின் பாதுகாப்புத் தலைவரையும் தலைமை அரசாங்க வழக்கறிஞரையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

அவர்களின் துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை 650க்கும் மேற்பட்ட தேசத் துரோக வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செலென்ஸ்கியின் பால்ய நண்பரும் முன்னாள் வர்த்தகப் பங்காளியுமான பாதுகாப்புச் சேவைத் தலைவர் ஐவன் பக்கானோவ் தனது கடமைகளைப் புறக்கணித்ததற்காகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை அரசாங்க வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

முன்னர் அவர் ரஷ்யப் போர்க் குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

Post a Comment

0 Comments