சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் தரவிற்கமைய நேற்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் 62 கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே எச்சரித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசயைப் பெற்றுக் கொள்ளாதவர்களை விட தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் வைரஸிலிருந்து நன்கு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வு தரவுகள் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குறிப்பிடத்தக்களவு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற போதிலும் , முன்னர் போன்று பல பகுதிகளில் கொவிட் பரிசோதனைகள் இடம்பெறவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, தற்போது நாட்டில் கொவிட் -19 தொற்றாளர்களின் உண்மையான எண்ணிக்கை சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


0 Comments