போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணி, மதிய நேர இடைவேளையின் போது 29 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களைப் பெற்றது.
இம்முறை நீல வர்ணங்களின் சமர் கிரிக்கெட் போட்டியில் கிஷான் பாலசூரிய ரோயல் கல்லூரி அணியை வழிநடத்துவதுடன், ரயன் பெர்னாண்டோ புனித தோமஸ் கல்லூரி அணிக்கு தலைவராக செயற்படுகின்றார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
சென் தோமஸ் கல்லூரியின் சேனாதி புலன்குலம மற்றும் நஜிது அபேகுணவர்தன ஆகியோர் முதல் விக்கெட்டிற்காக மதிய நேர இடைவேளையின் போது 53 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
0 Comments