Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

”எனக்கும் புற்றுநோய் இருந்தது”.. இணையத்தில் தீயாய் பரவும் அதிபர் ஜோ பைடன் பேச்சு!


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தை ஆய்வு செய்ய அதிபர் ஜோ பைடன் சென்றார். அப்போது பேட்டி அளித்த ஜோ பைடன், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். "என்ன செய்வதென்றே தெரியாமல் அம்மா எங்களை வளர்த்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுகள் எங்கள் வீட்டு ஜன்னல்களில் ஒட்டிக்கொள்ளும். அதை சுத்தம் செய்ய வைபரை ஜன்னல்களில் வைத்திருக்க வேண்டும். அதனால்தான் நான் மற்றும் பலர் புற்றுநோயுடன் வளர்ந்தோம். நாட்டிலேயே நாங்கள் வசித்த டெலாவேர் பகுதிதான் அதிக புற்றுநோய் விகிதம் கொண்ட பகுதியாக இருந்தது" எனக் கூறினார்.



அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் ஜோ பைடன் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்கினர். 

இந்த விவகாரம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமெரிக்க வெள்ளை மாளிகை இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்பு தோல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே முறையான சிகிச்சை பெற்று அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments