Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் : சபாநாயகர் விசேட அறிவிப்பு


ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உரிய விதிகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெறும் வாக்கெடுப்பினை ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நிறைவு செய்ய சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments