Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!

 



ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்


நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரமாண்டமாக தயாராகவிருக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப்போகிறது என்று..

Post a Comment

0 Comments