Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

யாழில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது...!


யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து, படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது.

படகு ஒன்றுக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments