
பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இன்று (13) காலை முதல் முன்னெடுக்கப்பaட்டு வந்த நிலையில் போராட்டக்காரர்கள் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கொழும்பு - 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றிய போராட்டக்கார்கள் அங்கு தமது கொடியையும் பறக்கவிட்டுள்ளனர்.

0 Comments