உலகின் பெரும் செல்வந்தர் இலோன் மஸ்க்கிற்கு எதிரான ட்விட்டரின் வழக்கை வரும் ஒக்டோபரில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் சமூகதளத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து மஸ்க் ஜூலை ஆரம்பத்தில் வெளியேறியதை அடுத்தே அவர் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குத் தொடுத்தது.
மக்ஸ் ஒப்புக்கொண்ட பங்கு ஒன்றை 54.20 டொலர் விலைக்கு வாங்கும் உடன்படிக்கையை அவர் பூர்த்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றே ட்விட்டர் கோருகிறது.
எனினும் அந்த நிறுவனம் போலிக் கணக்குகள் பற்றிய தகவலை மறைத்ததாக மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கின் சிக்கலான தன்மையை கருதி விசாரணையை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளும்படி மஸ்கின் சட்டக்குழு கேட்டநிலையில் ட்விட்டர் செப்டெம்பரில் எடுத்துக்கொள்ளும்படி கோரியது.
விசாரணையின்போது நீதிபதியிடம் முறையிட்ட ட்விட்டர் வழக்கறிஞர் வில்லியம் சாவிட்,"வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும், அதற்கான நியாயமான பல காரணங்கள் எங்களிடம் இருக்கின்றன" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்வார் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் நிறுவனத்தின் கோரிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்றுள்ளார்.
0 Comments