Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் ரி‌ஷி சுனக் தொடர்ந்து முன்னிலை...!



இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் ஆரம்ப சுற்றுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரி‌ஷி சுனக் முன்னிலை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய வம்சாவளிகளான ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மற்றும் பென் வேலஸ், பென்னி மோர்டான்ட் உட்பட 11 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர். இந்நிலையில், ரிஷி சுனக் உட்பட 6 வேட்பாளர்கள் கடந்த வியாழனன்று 2ஆவது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

3ஆம் சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயர் வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments