Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை?



சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, பதில் ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரையை விடுத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரிடம் ஒப்படைக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ரஞ்சன் ராமநாயக்க மிக விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments