Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அக்கரைப்பற்று வலய கரப்பந்து தொடர்; பொத்துவில் அல்-இஷ்ராக் வெற்றி..!



அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்து சுற்றுப்போட்டிகள் 16, 18, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவுகளில் தனித்தனியாக நடைபெற்றன.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில், பொத்துவில் அல்-இஷ்ராக் மகா வித்தியாலய அணி, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அணியை 3:2 புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டி சம்பியனானது.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டி அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில், அக்கரைப்பற்று பாயிஷா மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும், ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

அக்கரைப்பற்று அஸ்-−ஸிராஜ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில், ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும், அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி) யின் ஆலோசனை, வழிகாட்டலில், அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் ஆகியோர் போட்டிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடாத்தினர். அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் பிரதேச பாடசாலைகளின் கரப்பந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற கோட்டமட்ட கரப்பந்து போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகள் வலயமட்ட போட்டிகளில் பங்குபற்றின.


Post a Comment

0 Comments