Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உக்ரைன் யுத்தம் - ரஸ்யாவிற்கு ஆளில்லாத விமானங்களை வழங்க ஈரான் திட்டம்...!



உக்ரைன் யுத்தத்தில் பயன்படுத்துவதற்காக ரஸ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது குறித்து ரஸ்ய படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு ஈரான் திட்டமிடுகின்றது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.

ஈரான் இன்னமும் ஆளில்லா விமானங்களை வழங்கவில்லையா என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஈரானின் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments