
கொடுக்கல் வாங்கலில் பணத்துக்குப் பதிலாக டிஜிட்டர் பணப் பரிமாற்றம் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் 40 நாடுகளை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்ததில் இந்தியா 25ம் இடத்தில் காணப்படுவதாகவும் இந்திய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டில் முதல் தடவையாக இக் கணிப்பை 2017ம் ஆண்டின் பேரில் நடத்தப்பட்டபோது 12ம் இடததில் இருந்து எட்டாம் இலக்கத்துக்கு இந்தியா வீழ்ச்சி கண்டிருந்ததாகவும் அதன் பின்னர் டிஜிட்டல் பண கொடுக்கல் வாங்கலில் புழக்கம் படிப்படியாக அதிகரித்துச் சென்றதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய வளர்ச்சியை எடை போடுவதற்காக 21 நாடுகளில் இக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆசிய மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டர் பண பரிமாற்ற அலகுகளோடு ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பிலேயே இந்தியா வேகமான வளர்ச்சியைக் காட்டியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக ரசீதுகளுக்கான கொடுப்பனவுகள், கிரடிட் கார்ட் பயன்பாடு என்பன அதிகரித்துச் சென்றதன் விளைவாகவே இந்தியா படிப்படியான முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக வங்கி மேலும் தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
எனினும் 2020இல் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகவும் கொவிட் தொற்று காரணமாகவும் டிஜிட்டல் பணப்பறிமாற்றம் குறைவடைந்து நாணயத்தாள் புழக்கம் அதிகரித்தது என்றும் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
எனினும் 2020இல் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகவும் கொவிட் தொற்று காரணமாகவும் டிஜிட்டல் பணப்பறிமாற்றம் குறைவடைந்து நாணயத்தாள் புழக்கம் அதிகரித்தது என்றும் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

0 Comments