Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படப்பிடிப்பு நிறைவு...!



இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படமான ‘பகாசூரன்’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பகாசுரன்’. இதில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.



எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன் .ஜி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். படபிடிப்பு நிறைவு பெற்றதால் விரைவில் இந்த படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சாதிய உணர்வுகளை தூண்டி, அதனை படைப்பாக ஒரு மாற்றம் செய்து, வசூல் வேட்டையில் இறங்கி இருக்கும் படைப்பாளிகளில் ஒருவரான மோகன் ஜி இயக்கத்தில், ‘பகாசுரன்’ தயாராகி இருப்பதால், இந்த படத்திற்கும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments