இத்தாலியப் பிரதமர் மரியோ டிராகியின் பதவி விலகலை அந்நாட்டு ஜனாதிபதி செர்கியோ மட்டாரெல்லா நிராகரித்துள்ளார்.
அதிகரிக்கும் விலைகளைச் சமாளிப்பதற்கு டிராகி முன்வைத்த திட்டம் குறித்த நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பு கடந்த வியாழனன்று நடைபெற்றது. இத்தாலியின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான 5 ஸ்டார் முவ்மன்ட் அதற்கு எதிராக வாக்களித்தது.
‘அரசாங்கத்துக்கு ஆதரவளித்த தேசிய ஐக்கியக் கூட்டணி இனி இல்லை’ என்று கூறிய டிராகி தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
இருப்பினும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி ஜனாதிபதி மட்டாரெல்லா வலியுறுத்தினார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும்படி அவர் டிராகியிடம் கூறினார்.
பாராளுமன்றக் கூட்டம் வரும் புதன்கிழமை
(20 ஜூலை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்து வரும் நிலையிலேயே இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


0 Comments