Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பள்ளிகளில் தமிழ்ப் பாட வேளைகள் குறைப்பு.. தமிழுக்கு செய்யும் அவமரியாதை இது.. கொதித்தெழுந்த ராமதாஸ்!


பள்ளிகளில் தமிழ்ப் பாட வேளைகள் குறைப்பு.. தமிழுக்கு செய்யும் அவமரியாதை இது.. கொதித்தெழுந்த ராமதாஸ்!
 

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் பாட வேளைகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நடப்பு கல்வியாண்டு ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை

அதில் இதுவரை வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்று இருந்ததை , ஆறு பாட வேளைகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி நீதிபோதனை மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகளுக்காகவும் பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தமிழ் பாடத்திற்கான பாட வேளையை குறைத்திருப்பது சரியல்ல என்றும், மீண்டும் பழைய படி வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் பாடத்தில் தோல்வி

தமிழ் பாடத்தில் தோல்வி

அதேபோல் அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் மாணவர்கள் மத்தியில் குறைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதனால் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ராமதாஸ் ட்வீட்

ராமதாஸ் ட்வீட்

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் பாட வேளைகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானது.

முடிவை கைவிட வலியுறுத்தல்

முடிவை கைவிட வலியுறுத்தல்

வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை என்று தெரிவித்துள்ளார். எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பு இருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

@Oneindia

Post a Comment

0 Comments