
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு நாளைக்கு முன் இஸ்ரேலியப் படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பலஸ்தீன இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக பலஸ்தீன மருத்துவ வட்டாரம் தெரிவித்தது.
17 வயதான கமேல் அலவ்னே என்ற இளைஞன், ஜெனின் நகரில் வைத்து வயிறு மற்றும் கையில் துப்பாக்கிக் காயங்களுக்கு இலக்கானதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அலாவி படையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்ததாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த மார்ச் பிற்பகுதி தொடக்கம் நாற்பத்தொன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments